ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு, துலுக்கப்பட்டி, கொடிக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட அழகாபுரியிலிருந்து பிளவக்கல் அணை வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.