விருத்தாசலம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

விருத்தாசலம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-08-18 18:58 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் மின்வாரியம் பூதாமூர் துணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் விருத்தாசலம் நகரம், தென்னக ெரயில்வே குடியிருப்பு பகுதி, கடைவீதி, சேலம் மெயின்ரோடு, கடலூர் மெயின் ரோடு, ஜங்ஷன் ரோடு, பெரியார்நகர் தெற்கு மற்றும் வடக்கு, பூதாமூர், சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம் மற்றும் கண்டியாங்குப்பம், முதனை துணை மின் நிலையங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவல் விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்