வெள்ளியணை, மாயனூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
வெள்ளியணை, மாயனூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வெள்ளியணை, கரூர், உப்பிடமங்கலம், காணியாளம்பட்டி, மாயனூர் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் வெள்ளியணை, சமத்துவபுரம், செல்லிபாளையம், குமாரபாளையம், புதூர், கரூர் எல்.ஜி.பி. நகர், அம்மன் நகர், சோழநகர், எஸ்.பி.ஐ. காலனி, சக்தி நகர், நியூ சக்தி நகர், கருப்பம்பாளையம், செட்டி பாளையம், சுக்காலியூர்.
உப்பிடமங்கலம், சின்னா கவுண்டனூர், காளையப்பட்டி, கரூர் மாநகராட்சி நீரேற்று நிலையம், தாந்தோணி மலை நீரேற்று நிலையம், திண்டுக்கல் நீரேற்று நிலையம், மேல மாயனூர், கீழ மாயனூர், கட்டளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரிய வட்ட செயற்பொறியாளர் கணிகைமார்தாள் தெரிவித்துள்ளார்.