புலியூர், க.பரமத்தி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

புலியூர், க.பரமத்தி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-21 19:02 GMT

புலியூர் துணைமின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம், தாளப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டுமுன்னூர், கார்வழி, வடகரை, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், எல்லமேடு, புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சைகாளக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், க.பரமத்தி, நெடுங்கூர், கரூர் ஜவுளிப்பூங்கா, ஆறுரோடு, தும்பிவாடி, பள்ளப்பாளையம், தாதம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்