நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டறம்பள்ளி, பச்சூர், உதயேந்திரம், ஜோலார்பேட்டை துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. அதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, தாசிரியப்பனூர், ஜங்களாபுரம், அதிபெரமனூர், கத்தாரி, பச்சூர், கொத்தூர், காந்திநகர், சுண்டம்பட்டி, தோல்கேட், பழையபேட்டை, புதுபேட்டை, குடியானகுப்பம், ஜோலார்பேட்டை, ராமரெட்டியூர், கட்டேரி, உதயேந்திரம், ஜாப்ராபாத், கொல்லகுப்பம், இளையநகரம், மதனாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் சப்ளை இருக்காது என்று வாணியம்பாடி மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.