கல்லக்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

கல்லக்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-01-05 21:04 GMT

கல்லக்குடி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், முதுவத்தூர், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, கல்லகம், கீழரசூர், ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலை, கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், குமுளூர், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி, வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டூர், விளாகம், குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி, டி.கல்விக்குடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர் பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை லால்குடி இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்