செங்கல்பட்டில் இன்று மின்தடை

செங்கல்பட்டு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று மின்விநியோகம் தடைப்படும்.;

Update: 2022-07-08 01:24 GMT

செங்கல்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூர், மகாலட்சுமி நகர், மெய்யூர், திருவானைக்கோயில், புலிபாக்கம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம், சாலவாக்கம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்