வரதராஜன்பேட்டை, ஆண்டிமடம், கிளிமங்கலத்தில் இன்று மின் நிறுத்தம்

பராமரிப்பு காரணமாக வரதராஜன்பேட்டை, ஆண்டிமடம், கிளிமங்கலத்தில் இன்று (திங்கட்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;

Update: 2022-06-05 18:06 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் உபகோட்டத்திற்குட்பட்ட வரதராஜன்பேட்டை, ஆண்டிமடம் மற்றும் கிளிமங்கலம் ஆகிய மின் பாதைகளில் இன்று (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கவரப்பாளையம், தென்னூர், செங்கமெடு, வரதராஜன் பேட்டை, பெரிய கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், ஆண்டிமடம், பட்டிணம் குறிச்சி, அருளானந்தபுரம், கூவத்தூர், வடுகர் பாளையம், ஒலையூர் மற்றும் கிளிமங்கலம் ஆகிய பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரையும் மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்