இன்று மின்சாரம் நிறுத்தம்

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-06-13 20:16 GMT


விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் உள் அரங்கு துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான கம்மாபட்டி சத்தியமூர்த்தி சாலை, பட்டேல் ரோடு, ஏ.ஏ.ரோடு, பேராலி ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி, தந்தி மர தெரு, எல்.ஐ.ஜி. காலனி, பேராசிரியர் காலனி, சாஸ்திரி நகர், கல்லூரி சாலை, கால்நடை ஆஸ்பத்திரி ரோடு, ரிங்க் ரோடு, ெரயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் வடக்கு பகுதி, காசுக்கடை பஜார், காந்திபுரம் தெரு, அழகர்சாமிதெரு, கந்தபுரம் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

மல்லாங்கிணறு

அதேபோல மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆதலால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான வலையங்குளம், நந்திக்குண்டு, மேல துலுக்கங்குளம், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, அழகிய நல்லூர், வலுக்கலொட்டி, வரலொட்டி, நாகம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் பாபு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்