ராஜபாளையம்,
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் ஜெயரங்கா பீடர் மற்றும் மெட்ராஸ் சிபோர்டு பீடரில் உள்ள மின் பாதையில் பராமரிப்பு பணி இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் பொன்னகரம், ஆசிரியர் குடியிருப்பு, மில் கிருஷ்ணாபுரம், நரிமேடு, பி.ஆர்.ஆர். நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், முகில் வண்ணம் பிள்ளை தெரு, புதிய பஸ் நிலையம், கணபதி சுந்தர நாச்சியார்புரம், தென்காசி ரோடு, தெற்குவெங்காநல்லூர் விவசாய பகுதி, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.