இன்று மின்நிறுத்தம்
நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாகை, வேளாங்கண்ணி துணை மின் நிலையங்களில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணைமின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் நாகை சால்ட் ரோடு, சேவா பாரதி, டாட்டா நகர், காமராஜ் நகர், சுனாமி குடியிருப்பு, தோணித்துறை, பாண்டியன் தியேட்டர், கீச்சாங்குப்பம், அக்கரைபேட்டை, பாப்பாக்கோவில் புதிய கல்லார், கருவேலங்கடை, அந்தணபேட்டை, புதுச்சேரி, ஆபராணி, ஒரத்தூர், கரை இருப்பு, வடுகச்சேரி, ஆலங்குடி, புத்தூர், மஞ்சக்கொல்லை, சிக்கல், பனைமேடு, செல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகை உதவி செயற்பொறியாளர் நடேசன் தெரிவித்தார்.