இன்று மின்நிறுத்தம்
முத்துப்பேட்டை பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.;
தில்லைவிளாகம்:
முத்துப்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான தம்பிக்கோட்டை கீழக்காடு, ஜாம்புவானோடை, ஆலங்காடு, உப்பூர், உதயமார்த்தாண்டபுரம், தில்லைவிளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபு தெரிவித்துள்ளார்.