இன்று மின் நிறுத்தம்

மணல்மேடு, நாங்கூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2023-08-04 18:45 GMT

மணல்மேடு:

சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மணல்மேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அகரமணல்மேடு, ராஜசூரியன்பேட்டை, ராதாநல்லூர், இலுப்பப்பட்டு, வக்காரமாரி, முடிகண்டநல்லூர், உத்திரங்குடி, கடலங்குடி, ஆத்தூர், பூதங்குடி, திருச்சிற்றம்பலம், வேட்டங்குடி, குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதேபோல் திருவெண்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாங்கூர், மேலச்சாலை, கீழச்சாலை, திருவாளி, புதுத்துறை மற்றும் நிம்மெலி ஆகிய ஊர்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை சீர்காழி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்