சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் திட்டை, செம்மங்குடி, கடவாசல், வடகால், திருக்கருகாவூர், விநாயககுடி, கீராநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்துள்ளார்.