இன்று மின்சாரம் நிறுத்தம்
நயினார்கோவில், சத்திரக்குடி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நயினார்கோவில்,
நயினார்கோவில் பகுதியில் மின்பராமரிப்பு பணிகள் இன்று(புதன்கிழமை) நடக்கிறது. எனவே நயினார்கோவில், வல்லம், சிறகிக்கோட்டை, தாளையடி கோட்டை, பகைவென்றி, அக்கிரமேசி, பாண்டியூர், எஸ்.வி.மங்கலம், அ.கச்சான், உதயகுடி, நகரம், அரியாங்கோட்டை, வாதவனேரி, மற்றும் சத்திரக்குடி பிரிவில் சத்திரக்குடி, கொடிக்குளம், முத்துவயல், காமன்கோட்டை, மென்னந்தி, செவ்வூர், கிழக்கோட்டை, பொட்டிதட்டி, மஞ்சூர், அரியநேந்தல் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின் உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்தார்.