நாளை மறுநாள் மின் நிறுத்தம்
ராஜந்தாங்கல், தண்டராம்பட்டில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
வேட்டவலம்
தண்டராம்பட்டு மற்றும் வேட்டவலத்தை அடுத்த ராஜந்தாங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை ராஜந்தாங்கல், கொளத்தூர், சாணிப்பூண்டி, கீழ்கரிப்பூர், இசுக்கழிகாட்டேரி, அண்டம்பள்ளம், ஆனானந்தல், மதுராம்பட்டு, கோணலூர், நாடழகானந்தல், கெங்கம்பட்டு, செல்லங்குப்பம்,
காட்டுமலையனூர், பொலக்குணம் மற்றும் தண்டராம்பட்டு, ராதாபுரம், தாழனோடை, தென்முடியனூர் ஆகிய பகுதிகளிலும், தானிப்பாடி, சாத்தனூர், கொட்டையூர், மலையனூர் செக்கடி மற்றும் பெருங்குளத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள், மு.ராஜசேகரன், ராஜஸ்ரீ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.