நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
முத்தனம்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கன்னிவாடி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பாலம் ராஜக்காபட்டி, அணைப்பட்டி, நாச்சகோணான்பட்டி, முத்தனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, கதிரையன்குளம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை கன்னிவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.