நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

சித்தர்கள் நத்தம் பகுதியில் பராமரிப்பு பணியையொட்டி நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-05 15:28 GMT

சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி சிலுக்குவார்பட்டி, சித்தர்கள் நத்தம், சிறுநாயக்கன்பட்டி, நூத்துலாபுரம், அம்மாபட்டி, மைக்கேல்பாளையம், அணைப்பட்டி, குண்டலபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்