தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் இடங்கள்

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.;

Update: 2023-08-03 18:45 GMT

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய தங்கத்தேர் பவனி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தங்கத்தேர் 18 அடி அகலம் உள்ளதாலும், தங்கத்தேர் செல்லும் பாதை குறுகலாக இருப்பதாலும், பொதுமக்களின் நலன் கருதி மின்சார பாதுகாப்பு நடவடிக்கைக்காக நாளை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடை தெரு, பிராப்பர் தெரு, தெற்கு ராஜாதெரு, கிரகோப் தெரு, ஜி.சி. ரோடு, மாதாகோவில் தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்