30-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

வெம்பக்கோட்டையில் 30-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-01-27 19:10 GMT

சிவகாசி, 

சிவகாசி கோட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, செவல்பட்டி, கங்கரக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜய கரிசல்குளம், பனையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம், செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம்மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, கங்கரக்கோட்டை, கிருஷ்ணாபுரம், கீழச்செல்லையாபுரம், கோவில்செல்லையாபுரம், சாணாகுளம், ஊத்துப்பட்டி, ரெட்டியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, வெள்ளையாபுரம், புல்லக்கவுண்டன்பட்டி, எலுமிச்சங்காய்பட்டி, அன்பின்நகரம், மரக்நாதபுரம், தூங்கரெட்டியாபட்டி, நாரணாபுரம், பந்துவார்பட்டி, புதுசூரங்குடி, கம்மாசூரங்குடி, மேலபுதூர் ஆகிய பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்