16-ந் தேதி மின் நிறுத்தம்

வடசேரி பகுதியில் 16-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

Update: 2023-10-13 21:10 GMT

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு வட்டம் வடசேரி துணை மின் நிலையத்தில் 16-ந்தேதி (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறக்கூடிய வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, அண்டமி ஓலையக்குன்னம், வளையக்காடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுகுடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்