வாளாடி, சமயபுரம், புலிவலம், வாத்தலை, உப்பிலியபுரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

வாளாடி, சமயபுரம், புலிவலம், வாத்தலை, உப்பிலியபுரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-04-30 20:16 GMT

வாளாடி, சமயபுரம், புலிவலம், வாத்தலை, உப்பிலியபுரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணிகள்

லால்குடி கோட்டம் வாளாடி துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டீ.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை, சரவணா நகர், தேவி நகர், கைலாஸ்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை லால்குடி செயற்பொறியாளர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

சமயபுரம்

இதேபோல் ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி வ.உ. சி நகர், பூங்கா, எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேல சீதேவி மங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீ பெரும்புதூர், மாருதி நகர், தாளக்குடி, கீரமங்கலம், ராஜா நகர், செல்ல தமிழ் நகர், ஆனந்த நகர், அகிலாண்டபுரம், பரஞ்சோதி நகர், கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, அழகியமணவாளம், குமரகுடி, திருவரங்கபட்டி, கோவத்தகுடி, பனமங்கலம், எடையபட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீரானி, சிறுபத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

வாத்தலை

இதேபோல் வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மூவானூர் வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், வாழ்மால்பாளையம், வாத்தலை, திருப்பைஞ்சீலி, திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு மற்றும் புலிவலம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட புலிவலம், மண்பறை, சந்தானப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம் புதூர், திருத்தலையூர், நல்லையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

உப்பிலியபுரம்

இதேபோல் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி மற்றும் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கொப்பம்பட்டி, முத்தையம்பாளையம், கொப்புமாபுரி, ராஜபாளையம், உப்பிலியபுரம், ஈச்சம்பட்டி, வைரிசெட்டிபாளையம், பசலிக்கோம்பை, ஏரிக்காடு, சூக்லாம்பட்டி, கோம்பை, பி.மேட்டூர், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், சோபனபுரம், காஞ்சேரிமலை, ஒடுவம்பட்டிபுதூர், ஓசரப்பள்ளி, புதூர், பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்