தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-07-25 15:36 GMT

தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

இதனால் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, சங்கரப்பேரி விலக்கு முதல் புதூர்பாண்டியாபுரம் வரை, ஆதிபராசக்திநகர், எஸ்.பி.ஜி.கோவில் 1, 2, 3-வது தெரு, மீனவவர் காலனி, சந்தை ரோடு, கான்வென்ட் ரோடு, சைமன் தெரு, நாடார் தெரு, தச்சர் தெரு, 1-ம் கேட், போல்பேட்டை மேற்கு, உழவர் சந்தை, கே.வி.கே. நகர், பிரையன்ட் நகர் 9 முதல் 12-வது தெரு வரை, மடத்தூர் பைபாஸ் ரோடு, டைமன்ட் காலனி, அய்யங்கோவில் தெரு, சூசை நகர், ஜெ.எஸ்.நகர், பாரதி நகர், அம்பேத்கார் நகர், குமாரசாமி நகர், எழில் நகர், அத்திமரப்பட்டி, பொன்னான்டி நகர், காலாங்கரை, ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம், கச்சேரி தளவாய்புரம், கே. சுப்பிரமணியபுரம், குமாரபுரம், சாமிநத்தம், குமரெட்டியாபுரம், ராஜாவின் கோவில், தெற்கு வீரபாண்டியாபுரம், கலப்பை பட்டி, வேப்பங்குளம், அம்மாள் பட்டி, உழக்குடி வடக்கு காரச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்