திருப்புவனம் பகுதிகளில் நாளை மின்தடை
திருப்புவனம் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
திருப்புவனம் நெல்முடிகரையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் திருப்புவனம், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், டி.பாப்பாங்குளம், தூதை, திருப்பாச்சேத்தி, மாரநாடு, கொத்தங்குளம், கீழச்சொரிக்குளம், பிரமனூர், மேலச்சொரிக்குளம், முதுவந்திடல், பழையனூர், வயல்சேரி, சொக்கநாதிருப்பு, கீழராங்கியம், மேலராங்கியம், அல்லிநகரம், அ.வெள்ளக்கரை, நயினார்பேட்டை, கலியாந்தூர், கீழவெள்ளூர், மேலவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தாடி, மணலூர், கழுகேர்கடை, தட்டான்குளம் ஆகிய பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.