திருப்பாலை, ஆனையூர் பகுதியில் நாளை மின்தடை

திருப்பாலை, ஆனையூர் பகுதியில் நாளை மின்தடை

Update: 2022-10-31 20:13 GMT


மதுரை வடக்கு மின்கோட்டம் காந்திநகர் துணை மின்நிலையம், திருப்பாலை துணை மின்நிலையங்களில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே மகாத்மா காந்திநகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், வள்ளுவர் காலனி, கலை நகர், வ.உ.சி.நகர், குரு நகர், ஜே.என்.நகர், ஜே.ஜே.நகர், காலாங்கரை, மூவேந்தர்நகர், சென்ட்ரல் பேங்க் காலனி, பூந்தமல்லிநகர், மீனாம்பாள்புரம், முடக்காத்தான், ஆலங்குளம், எஸ்.வி.பி.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

மேலும் திருப்பாலை துணை மின்நிலையத்தின் நாராயணபுரம் பீடரின் திருப்பாலை, கோபாலபுரம், கிருஷ்ணாநகர், பாரத்நகர், ஏழில்நகர், அய்யாவு தேவர், ஸ்ரீநகர், அய்யப்பன் நகர், பேங்க்காலனி, நாகனாகுளம், நாராயணபுரம், அய்யர்பங்களா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இத்தகவலை மதுரை வடக்கு கோட்ட மின்வாரிய என்ஜினீயர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்