தொண்டி பகுதியில் நாளை மின்தடை
தொண்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும்.;
தொண்டி,
தொண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும். இதனால் தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, எம்.வி.பட்டினம், திருவெற்றியூர், தினையத்தூர், எஸ்.பி. பட்டினம், பாசிப்பட்டினம், வட்டாணம், எம்.ஆர்.பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்றும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.