சீர்காழி பகுதியில் மின் நிறுத்தம்

சீர்காழி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு.;

Update: 2023-10-08 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் திருவெண்காடு நகர் பகுதியை சார்ந்த முத்தையா நகர், சாலைக்கார தெரு, பெருந்தோட்டம் பகுதியை சார்ந்த சாவடிக்குப்பம், கோசாலி குப்பம், நாயக்கர் குப்பம், மடத்துக்குப்பம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இதேபோல் சீர்காழி அருகே எடமணல் துணை மின் நிலையத்திலிருந்து கூழையார் செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எடமணல், விழுதலைக்குடி, ராதா நல்லூர், திருமுல்லைவாசல், தாழந் தொண்டி, ஆமபள்ளம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் விஜய பாரதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்