செந்துறை பகுதியில் இன்று மின் நிறுத்தம்
செந்துறை பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
செந்துறை:
செந்துறை துணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, சிறுகடம்பூர், சென்னிவனம், அகரம், கட்டையன்குடிக்காடு, மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்தநாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை 9.45 முதல் மாலையில் பணி முடியும் வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று செந்துறை உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் தெரிவித்துள்ளார்.