சுழற்சி முறையில் மின் நிறுத்தம்

பொறையாறு-செம்பனார்கோவில் பகுதிகளில் 29-ந் தேதி வரை சுழற்சி முறையில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-17 16:04 GMT

பொறையாறு

பொறையாறு-செம்பனார்கோவில் பகுதிகளில் இன்று முதல் 29-ந் தேதி வரை சுழற்சி முறையில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணிகள்

சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட பொறையாறு, கிடாரங்கொண்டான், திருவெண்காடு மற்றும் மேமாத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதைகளில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் இன்று(சனிக்கிழமை) முதல் 29-ந் தேதி(புதன்கிழமை) வரை சுழற்சி முறையில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

இன்று மின்நிறுத்தம்

அதன்படி இன்று பொறையாறு, கிடாரங்கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின்வினியோகம் பெறும் தரங்கம்பாடி, பூம்புகார், செம்பனார்கோவில், பொறையாறு, எருக்கட்டாஞ்சேரி, சந்திரபாடி, குரங்குபுத்தூர், மேலப்பெரும்பள்ளம், தலச்சங்காடு, மாமாகுடி, சின்னங்குடி, மருதம்பள்ளம், செம்பனார்கோவில், பரசலூர் மேலப்பாதி, புஞ்சை, கீழையூர், கஞ்சாநகரம், மேலையூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

20-ந் தேதி

20-ந் தேதி (திங்கட்கிழமை) கிடாரங்கொண்டான், திருவெண்காடு, பொறையாறு ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆக்கூர், மேலையூர், திருக்கடையூர், சாத்தனூர், பொன்செய், முடிகண்டநல்லூர், காலகஸ்திநாதபுரம், திருச்சம்பள்ளி, மடப்புரம், ராதாநல்லூர், இளைய மதுக்கூடம், திருக்கடையூர், அனந்தமங்கலம், காழியப்பநல்லூர் திருமெய்ஞானம், பிள்ளை பெருமாநல்லூர், காட்டுச்சேரி, ஆயப்பாடி, எடுத்துக்கட்டி, சாத்தனூர், பாலூர், மாங்குடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

21 முதல் 29-ந் தேதி வரை...

இதேபோல, 21-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை கிடாரங்கொண்டான், பொறையாறு ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்தும், 22-ந் தேதி கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்தில் இருந்தும், 23-ந் தேதி மேமாத்தூர், பொறையாறு ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்தும்,24-ந் தேதி கிடாரங்கொண்டான், மேமாத்தூர், திருவெண்காடு, பொறையாறு ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்தும்,

27-ந் தேதி மேமாத்தூர், திருவெண்காடு, பொறையாறு ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்தும், 28-ந் கிடாரங்கொண்டான், மேமாத்தூர், திருவெண்காடு, பொறையாறு ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்தும், 29-ந் தேதி திருவெண்காடு, பொறையாறு ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்தும் மின்வினியோகம் பெறும் கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்