புனல்குளம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

புனல்குளம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-11-22 19:03 GMT

புதுக்கோட்டை அருகே புனல்குளம் தொகுப்பு துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன்பட்டி, புதுநகர், முதுகுளம், குளத்தூர் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர்குடிகாடு, ஆத்தங்கரைப்பட்டி, சாமிப்பட்டி, கீராத்தூர், பருக்கைவிடுதி, குளத்தூர், மூக்கப்புடையான்பள்ளம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்சார வாரிய உதவிசெயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்