புதுக்கருவாட்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
புதுக்கருவாட்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கஞ்சனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட புதுக்கருவாட்சி மின்னூட்டியில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொரலூர், மேல்காரணை, கல்யாணம்பூண்டி, நங்காத்தூர், சங்கீதமங்கலம், சாலவனூர், பனமலைப்பேட்டை, சி.என்.பாளையம், வெள்ளையாம்பட்டு, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.