நீர்பழனி, பல்கலைக்கழகம், புதுக்கோட்டை நகர் பகுதிகளில் நாளை மின் தடை

நீர்பழனி, பல்கலைக்கழகம், புதுக்கோட்டை நகர் பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படுகிறது.

Update: 2023-02-16 19:12 GMT

தமிழ்நாடு மின்சார வாரிய மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொண்டைமான்நல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தொண்டைமான்நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், களமாவூர், காரப்பட்டு, தென்னத்திரையான்பட்டி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

குளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைெபற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், பரந்தாமன் நகர், கீழகாந்திநகர், மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லீம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமைநகர், அழகு நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று கீரனூர் உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கீழ ராஜ வீதி, தெற்கு 2-ம் வீதி, தெற்கு 3-ம் வீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், காந்திநகர், உசிலங்குளம், கே.எல்.கே.எஸ் நகர், திருநகர், சக்தி நகர், மேட்டுப்பட்டி, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பா நகர், அம்பாள்புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ் நகர், கணேஷ் நகர், கம்பன் நகர் தென்புறம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சையது அகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்