நாகலூர், அரசம்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

நாகலூர், அரசம்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Update: 2022-06-28 16:29 GMT

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் உயர் மின்னழுத்த மின் பாதைகளில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாகலூர் பகுதிக்குட்பட்ட பானையங்கால், விளக்கூர், சின்னமாம்பட்டு, தியாகை, சிறுவல், சிக்காடு, குன்னியூர், அவிரியூர், பூண்டி, கல்சிறுநாகலூர், ஏ.கொளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மினிவினியோகம் இருக்காது.

இதேபோல் சங்கராபுரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செம்பராம்பட்டு, பூட்டை, அரசம்பட்டு, பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி மோட்டாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் திருக்கோவிலூர், சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்