மாத்தூர், ஆவூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
மாத்தூர், ஆவூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தப்படுகிறது.
மாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், மாத்தூர் டவுன் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், சாமிஊரணிபட்டி, மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, சீத்தப்பட்டி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி, சஞ்சீவிராயர் கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளாார்.