கோவில்பட்டி- கழுகுமலை பகுதியில் புதன்கிழமை மின்தடை
கோவில்பட்டி- கழுகுமலை பகுதியில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொது மக்களுக்கு தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் இன்று(புதன்கிழமை) நடைபெற உள்ளது.
எனவே, கோவில்பட்டி உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் தினசரி மார்க்கெட் பகுதி, கடலை கார தெரு, செக்கடித் தெரு, இனாம் மணியாச்சி, இந்திரா காலனி, மஞ்சு நகர், விநாயகா நகர், இ.பி. காலனி, ஹோண்டா கார் கம்பெனி பகுதி, ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளுக்கும்.
விஜயாபுரி நிலையத்தின் 2 உயர் அழுத்த மின் இணைப்புகள் மூலம் மின்வினியோகம் பெறும் செமப்புதூர், ஈராச்சி ஆகிய பகுதிகளுக்கும், வாய் பட்டி, புதூர், அருணாச்சலபுரம், வெங்கடாசலபுரம் ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும்.
இதேபோன்று எம். துரைசாமிபுரம் உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் காளாம் பட்டி, நாச்சியார் புரம், கோபாலபுரம், விட்டிலா புரம், அழகப்பபுரம் கானாங்கரைப்பட்டி கெச்சிலாபுரம், சங்கரலிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கும், கழுகுமலை உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் சி.ஆர். காலனி, கரடிகுளம் ஆகிய பகுதிகளுக்கும், சுண்டக் குறிச்சி உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் உசிலங்குளம் பகுதிக்கும், கடம்பூர் உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பன்னீர்குளம், வடக்கு மற்றும் தெற்கு மயிலோடை ஆகிய பகுதிகளுக்கும், பசுவந்தனை உபமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் முள்ளுப் பட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கும், பொம்மையாபுரம், மிளகு நத்தம் ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.