கீழப்பழுவூர், கூத்தூரில் நாளை மறுநாள் மின்தடை
கீழப்பழுவூர், கூத்தூரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் மற்றும் கூத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அரியலூர் நகரில் மேற்கு பகுதிகள், புஜங்கராயநல்லூர், ஜமீன் ஆத்தூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், உசேன் நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், திம்மூர், வெண்மணி, மேத்தால், கீழப்பழுவூர், மேலப்பழுவூர், பொய்யூர், கருப்பூர், கோக்குடி, பூண்டி, கல்லக்குடி, கீழ வண்ணம், அருங்கால், கருவடச்சேரி, வைப்பம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.