ஜெகதாபி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
ஜெகதாபி பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் கோட்டத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துபட்டி, காணியாளம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிபட்டி, முத்துரங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையபட்டி, வரவணை வடக்கு, மேலபகுதி, சி.புதூர், விராலிபட்டி, லந்தக்கோட்டை, சிரகம்பட்டி, கரும்புளிபட்டி ஆகிய பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் நகரியம் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.