சோளிங்கர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
சோளிங்கர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சோளிங்கர்
சோளிங்கர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சோளிங்கர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் கல்பட்டு உயரழுத்த மின் பாதையிலுள்ள மரங்களை வெட்டும் பணி, சாய்ந்த மின் கம்பங்களை சரிசெய்தல், அறுந்த நிலையில் உள்ள இழுவை கம்பிகளை சரி செய்தல், மிகவும் தொய்வாக உள்ள மின் கம்பிகளை சரிசெய்தல், பழுதடைந்த நிலையில் உள்ள இணைப்பு கம்பிகளை சரி செய்தல், மற்றும் பழுதடைந்த மின் தளவாட பொருட்களை மாற்றுதல் போன்ற பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி நாளை காலை 10 மணி முதல் 12 மணிவரை சோமசமுத்திரம், மோட்டூர் எசையனூர், பில்லாஞ்சி, கல்பட்டு மற்றும் ஈடிகைபெண்டை போன்ற ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று உதவி செயற்பொறியாளர் ப.சங்கர் தெரிவித்துள்ளார்.