சோழவந்தான் பகுதியில் 18-ந் தேதி மின்தடை
சோழவந்தான் பகுதியில் 18-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது
வாடிப்பட்டி,
சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் துணை மின் நிலையத்தில் 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து, வாட்டர்பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டைக்ஸ், விஜயலட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா ஸ்கூல், மேலகால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழ மட்டையான், மேல மட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், மேலகால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளி பள்ளம், மண்ணாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.