அதவத்தூர், பொன்னகர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

அதவத்தூர், பொன்னகர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2023-05-10 19:19 GMT

அதவத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர், குழுமணி, அதவத்தூர்சந்தை, சுண்ணாம்புகாரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்கோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன்வேலி, சிவந்தநகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிகரும்பூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் பெருநகர் கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருச்சி நகரியம் கோட்டம் பொன்னகர் பிரிவுக்குட்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சேட்டுகாலனி, தேசிய கல்லூரி, செண்பகம் அடுக்குமாடி குடியிருப்பு, விநாயகர் கோவில்தெரு 1, 2, 3, புதுத்தெரு, கலைக்காவேரி, சித்தார் வெசல்ஸ், மாந்தோப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி நகரியம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்