ஆனையூர், கருமாத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை ஆனையூர், கருமாத்தூர் பகுதிகளில் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.;
மதுரை ஆனையூர், கருமாத்தூர் பகுதிகளில் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
செக்கானூரணி
மதுரை செக்கானூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடக்கிறது. இதனால் கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூர், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலைநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின்செயற்பொறியாளர் முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
விராட்டிபத்து
மதுரை மேற்கு கோட்டம் அரசரடி உபமின் நிலையம் விராட்டிபத்்து உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை சம்மட்டிபுரம் மெயின்ரோடு, ஸ்ரீராம் நகர், எம்.எம். நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக் நகர், கோ ஆப்டெக்ஸ் காலனி, ஜெய் நகர், ராஜராஜேஸ்வரி நகர், இருளாண்டி தேவர் காலனி, கிருதுமால்நகர், ஜானகி நகர், ஆனந்தா நகர், தேவகி ஸ்கேன், வெள்ளைகண்ணு தியேட்டர் ரோடு, பிக் பஜார், முத்துராமலிங்க தேவர் தெரு, தமிழ் தென்றல் தெரு, பொன்மேனி புதூர்,அமிர்தா நகர், தேனி மெயின்ரோடு, ஈத்கா பில்டிங் வரை, பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மதுரை ஆனையூர் துணைமின் நிலையம் அவுசிங் ேபார்டு பகுதிக்கு உட்பட்ட சங்கீத் நகர், சஞ்சீவி நகர், ஆனையூர் மெயின்ரோடு, செல்லையா நகர், குட்செட் தெரு, அன்புநகர், அசோக் நகர் 3-வது தெரு, அப்பாதுரை நகர், மல்லிகை நகர், ஆனையூர் ஆபிசர் டவுன், சிலையநேரி, வைகை அபார்ட்மென்ட், கூடல்புதூர், கருப்பசாமி நகர், இந்திரா நகர், ஆனந்தா நகர், ஜே.ஜே.நகர், ெரயிலார் நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின்செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.