அளுந்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
அளுந்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அளுந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி அளுந்தூர், சேதுராபட்டி, பாத்திமாநகர், சூராவளிபட்டி, குஜிலியம்பட்டி, யாகபுடையான்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, களிமங்கலம், குன்னத்தூர், பிடாரம்பட்டி, சூரகுடிபட்டி, இ.மேட்டுப்பட்டி, மேலபச்சகுடி, அரசு கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐ.ஐ.ஐ.டி., பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.