அய்யர்மலை, நச்சலூர் உள்பட 10 துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

அய்யர்மலை, நச்சலூர் உள்பட 10 துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-07-24 18:45 GMT

அய்யர்மலை-தோகைமலை

கரூர் மின்பகிர்மான வட்டம் குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், பஞ்சப்பட்டி, பாலவிடுதி, சிந்தாமணிபட்டி, கொசூர் மற்றும் பணிக்கம்பட்டி ஆகிய 10 துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட 10 துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது. அதன் விவரம் பின்வருமாறு:-அய்யர்மலை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியாம்பட்டி, வேங்காம்பட்டி, திம்மம்பட்டி, கோட்டமேடு, இரும்பூதிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள்.தோகைமலை துணை மின்நிலையத்திற்குட்பட்ட தோகைமலை, தெலுங்கப்பட்டி, கழுகூர் உள்ளிட்ட பல்ேவறு பகுதிகள்.

நச்சல்லூர்-வல்லம்

நச்சலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட நச்சலூர், இனுங்கூர், புதுப்பட்டி, கள்ளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள். வல்லம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட லாலாபேட்டை, சிந்தலவாடி, திம்மாச்சிபுரம், கள்ளப்பள்ளி, புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள்.மாயனூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், சேங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள். பஞ்சப்பட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பஞ்சப்பட்டி, தாதம்பட்டி, கீரனூர், புதுவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள்.

பாலவிடுதி-சிந்தாமணிப்பட்டி

பாலவிடுதி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பாலவிடுதி, சேர்வைக்காரன்பட்டி, கோடங்கிபட்டி, பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள். சிந்தாமணிபட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட அய்யம்பாளையம், சீத்தப்பட்டி, தேவர்மலை, வீரவணை, விராலிப்பட்டி, தரகம்பட்டி,சிந்தாமணிப்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள்.கொசூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கொசூர், சந்தையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள். பணிக்கம்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட வளையப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என மேற்கண்ட தகவலை குளித்தலை மின்சாரவாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்