மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்தடை
மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்தடை விழுந்தது.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே அகரகொந்தகையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக அங்கு மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. இதனால் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நேற்று காலை மின் ஊழியர்கள் அறுந்து விழுந்த மின்கம்பியை சீரமைத்து, மின் வினியோகம் வழங்கினர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'மின்கம்பிகள் ஒன்ேறாடு ஒன்று உரசுவதும், மின் கம்பி அறுந்து விழுவதும் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை முறையாக பராமரிக்க வேண்டும்' என்றனர்.