விருதுநகரில் தொடரும் மின்தடை
விருதுநகரில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் மின் பகிர்மான வட்டத்தில் மின் பாதை பராமரிப்பு பணிகள் மற்றும் இன்சுலேட்டர்கள் மாற்றம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து மின்தடை ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று மின்பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் தேன்மொழி உறுதியாக தெரிவித்தார். ஆனால் நேற்று அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணிக்குள் நகரின் பிரதான பகுதிகளில் 5 முறை மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுவே அன்றாட நிகழ்வாக உள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலைநீடிக்கிறது. எனவே விருதுநகர் மின் பகிர்மான வட்ட நிர்வாகம் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.