மங்களமேடு, குன்னம் பகுதிகளில் மின் தடை ரத்து

மங்களமேடு, குன்னம் பகுதிகளில் மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-09-26 18:53 GMT

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக இருந்தது. இதனால் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி, மங்களமேடு துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

எனவே ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படாது.

Tags:    

மேலும் செய்திகள்