குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மஞ்சுப்பாளையம், காவேரி ஹைடெக் பார்க், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.