தொண்டி,
திருவாடானை மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட திருவாடானை, சி.கே.மங்கலம், கல்லூர், டி.நாகனி, கருமொழி, பாண்டுகுடி, வெள்ளையபுரம், ஆண்டாவூரணி, ஓரியூர், மங்கலக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.