ராமேசுவரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக ராமேசுவரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-05-10 18:45 GMT

ராமேசுவரம், 

பராமரிப்பு பணி காரணமாக ராமேசுவரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று(வியாழக்கிழமை) மற்றும் 16, 18, 20 ஆகிய தேதிகளில் கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தங்கச்சிமடம் பீடரில் நீதிமன்றம், பஸ் நிலையம் ஒரு பகுதி, செம்மமடம், மெய்யம்புளி, நொச்சி வாடி, பேக்கரும்பு கலாம் நினைவு நிலையம், அரியாங்குண்டு, தங்கச்சிமடம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வருகிற 16-ந் தேதி வேர்க்கோடு பீடரில் ஸ்ரீராம் நகர், எம்.ஜி.எஸ். நகர், பஸ் நிலையம் ஒரு பகுதி, சின்னவன் பிள்ளை தெரு, அண்ணா நகர், காந்திநகர், மார்க்கெட்தெரு, புது தெரு, 6 லைன், ராமநாதசாமி கோவில் தெற்கு பகுதி, ரெயில்வேபீடர்ரோடு, மல்லிகை நகர், எம்.ஆர்.டி. நகர், நடராஜபுரம், புது ரோடு, சேரன் கோட்டை பகுதிகள் வரை மின்தடை செய்யப்படுகிறது.

மின்சாரம் நிறுத்தம்

அதேபோல் 18-ந் தேதி ராமேசுவரம் பீடரில் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு, பொந்தம்புளி இறக்கம், சிவகாமி நகர், ராமர்தீர்த்தம் வடக்கு, முருங்கை வாடி, தம்பியான் கொல்ல, திட்டக்குடி சல்லிமலை, சம்பை, மாங்காடு, ஓலைக்குடா, ராமநாதசாமி மேலவாசல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், 20-ந் தேதி வடகாடு பீடரில் ஏரகாடு, குடியிருப்பு, வடகாடு இறால் பண்ணை பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்