இன்று மின்சாரம் நிறுத்தம்
ஆனந்தூர், திருவாடானை, நகரிகாத்தான் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆனந்தூர், திருவாடானை, நகரிகாத்தான் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் துணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கூடலூர், காவனக்கோட்டை, கொக்கூரணி, கோவிந்தமங்கலம், சூரியன்கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுக்குறிச்சி, புத்தூர், ஓடக்கரை, தூவார், ஆய்ங்குடி, சிறுநாகுடி, பூவாணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை திருவாடானை மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மின்சாரம் நிறுத்தம்
அதேபோல் திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். அதன்படி மேற்கண்ட துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் திருவாடானை, நகரிகாத்தான், சி.கே.மங்கலம் புளியால், அரசூர், கருமொழி, ஓரிக்கோட்டை, ஆண்டாவூரணி, பாண்டுகுடி, மங்களக்குடி, வெள்ளையபுரம், என்.மங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.